எம்மவர் நிகழ்வுகள்

வீரமுனை நண்பர்கள் நலன்புரி சங்கத்தினால் நடாத்தப்பட்ட மாபெரும் பாராட்டு விழா - 2018

வீரமுனை மண்ணில் இருந்து வெளிப்பட்ட சாதனை விருட்சங்களை பாராட்டி கௌரவிற்பதற்காக வீரமுனை நண்பர்கள் நலன்புரி அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் பாராட்டு விழா இன்று (2018.04.15) வீரமுனை R.K.M பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 

சுவாட் அமைப்பினால் சுயதொழில் கடன் வழங்கும் நிகழ்வு

சுவாட்  அங்கத்தவர்களுக்கான சுயதொழில் கடன் வழங்கும் நிகழ்வு நேற்று (27/03/2018) வீரமுனை சுவாட் பிரதேச காரியாலயத்தில் பிராந்திய இணைப்பாளர் T.திசானி  தலைமையில் இடம்பெற்றது. 

எமது ஆலயத்தில் இடம்பெற்ற புதுவருட சிறப்பு பூஜை

2018 ஆண்டுக்கான விளம்பி வருட புத்தாண்டை மக்கள் சிறப்பாக வரவேற்றதை காணக்கூடியதாக இருந்தது.இவ் ஆண்டானது மக்களுக்கு சிறப்பாக அமைய ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

'தேசிய ஆக்கத்திறன் விருது' போட்டியில் வீரமுனையை சேர்ந்த ச.வினுக்சன் அகில இலங்கை ரீதியில் மூன்றாமிடம்

இந்து சமய அலுவல்கள் திணைக்களத்தின் இந்து சமய அறநெறி மானவர்களுக்கான 2017க்கான ‘தேசிய ஆக்கத்திறன் விருது’ போட்டியின் 'கதாபிரசங்க போட்டி பிரிவில் வீரமுனை குருசுவாமி அறநெறி பாடசாலை மாணவன் சந்திரன் வினுக்சன் அகில இலங்கை ரீதியில் மூன்றாம் இடத்தை பெற்றுள்ளார். 

சுவாட் அமைப்பின் மாதாந்த பிரதேச நிருவாக கூட்டம்

சுவாட் அமைப்பின் மாதாந்த பிரதேச நிருவாக கூட்டம் கடந்த 11.04.2018 அன்று வீரமுனை சுவாட் பிரதேச காரியாலயத்தில் பிரதேச காரியாலய உத்தியோகத்தர் S.கவிதா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் சம்மாந்துறை பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்(W.D.O) M.ஜெஸிலா மற்றும் நிவாரண சகோதரி(R.S) M.T.பஸ்மியா, A.G.S.அனிஷா ஆகியோர் பிரமுகராக கலந்து கொண்டனர்.

வீரமுனை படுகொலை நினைவு நாள் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு

அம்பாறை வீரமுனையில் 232 இற்கும் அதிகமான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் நிறைவை நினைவு கூர்ந்து நேற்றைய தினம் வீரமுனையில் அமைந்துள்ள நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

வீரமுனை R.K.M பாடசாலை மாணவன் 9A பெற்று சாதனை

சது ராமகிருஷ்ணன் மிஷன் வித்தியாலயத்தை சேர்ந்த மாணவன் சந்திரன் விணுக்சன் கடந்த 2017 ம் ஆண்டு இடம்பெற்ற கல்வி பொது சாதாரண தர பரீட்சையில்  9A பெற்று  தனது பாடசாலைக்கும், ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய தீர்தோற்சவம்

வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 10ஆம் நாளாகிய வெள்ளிக்கிழமை (30/06/2017) தீர்தோற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.

சுவாட் அமைப்பினால் சுயதொழில் கடன் வழங்கும் நிகழ்வு

சுவாட்  அங்கத்தவர்களுக்கான சுயதொழில் கடன் வழங்கும் நிகழ்வு நேற்று (09/04/2018) வீரமுனை சுவாட் பிரதேச காரியாலயத்தில் பிராந்திய இணைப்பாளர் T.திசானி  தலைமையில் இடம்பெற்றது. 

ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவ தேர்த்திருவிழா

கிழக்கிலங்கை அம்பாறை வீரமுனையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவ தேர்த்திருவிழா 29.06.2017 அன்று வியாழக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. 

அதிகம் வாசித்தவை