ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய தீர்தோற்சவம்
வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 10ஆம் நாளாகிய வெள்ளிக்கிழமை (30/06/2017) தீர்தோற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.
விசேட கொடித்தம்ப பூசை, வசந்தமண்டப பூசையினைத் தொடர்ந்து மஞ்சள் இடிக்கும் நிகழ்வு இடம்பெற்று யானையிலே அங்குசம் எடுத்துச்செல்லப்பட்டு தீர்தோற்சவம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து சுவாமி உள்வீதியுலா மற்றும் அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது.