வீரமுனை இராம கிருஸ்ண வித்தியாலயத்தில் மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வு

செப்டெம்பர், 10 முதல் 16 வரை இலங்கை அரசினால் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய நுளம்புகள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நுளம்புகளை கட்டுப்படுத்தும் வகையில் விசேட நடவடிக்கைகள் நாடெங்கிலும் நடத்தப்பட்டு வருகின்றன.

இதனை முன்னிட்டு சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட வீரமுனை இராம கிருஸ்ண மகா வித்தியாலயத்தில் மாபெரும் சிரமதான நிகழ்வு இன்று (11/09/2015) மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டது. பாடசாலையின் அதிபர் கோனேசமூர்த்தி தலைமையில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், இராணுவ அதிகாரிகள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், பாடசாலை மாணவர்கள் இந்த சிரமதான நிகழ்வில் கலந்துகொண்டனர். இதன்போது பாடசாலையின் சூழலில் நுளம்பு பெருக்கத்துக்கு ஏதுவான பகுதிகளில் துப்புரவுசெய்யப்பட்டன.

dendu siramathanam 1

dendu siramathanam 2

dendu siramathanam 4

dendu siramathanam 3

dendu siramathanam 5

dendu siramathanam 6

dendu siramathanam 7

dendu siramathanam 8

dendu siramathanam 9

dendu siramathanam 9

dendu siramathanam 9

dendu siramathanam 9

 

அதிகம் வாசித்தவை