தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்வு
அதி மேதகு ஜனாதிபதி அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் செயற்படுத்தபட்டு வரும் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சி திட்டத்தின் ஓர் அங்கமாக இன்று சது/வீரமுனை இராமகிருஷ்ண மகா வித்தியாலயத்தில் நடை பெற்றது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் A.மன்சூர் அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வில் பாடசாலை மாணவர்கள்,சிவில் பாதுகாப்புகுழு உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோருக்கு விழிப்புணர்வு வழங்கும் நிகழ்ச்சியாக இந்நிகழ்வு நடைபெற்றது.
மேலும் சமுதாயம் சார் சீர்திருத்த திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் M.M.அஹமட் வசீர் அவர்களின் ஏற்பாட்டின் கீழ் நடைபெற்றது குறிப்பிட தக்க விடயமாகும்.
இந்நிகழ்வில் சம்மாந்துறை போலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உப்புல் பிரேமலால், சமுதாய போலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி அமீர் , சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் சப்றின் மற்றும் பாடசாலை அதிபர் S.கோணேசமூர்த்தி மற்றும் வீரமுனை 1,2,,3,4 பிரிவுகளின் கிராம சேவகர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,சிவில்பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் ,பாடசாலை மாணவர்களும் கலந்துகொண்டு பங்களிப்பு வழங்கினர்.