வீரமுனை சமூக அபிவிருத்தி அமைப்பினால் நடாத்தப்பட்ட மாபெரும் இலவசக் கருத்தரங்கு
மேற்படி அமைப்பானது கல்வி மற்றும் சமூக அபிவிருத்தியை இலக்காக கொண்டு தோற்றுவிக்கப்பட்டது. அந்தவகையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு
31.07.2015 அன்று வீரமுனை R.K.M பாடசாலையில் நடாத்தியது.
இக்கருத்தரங்கிற்கு வீரமுனை, வீரச்சோலை, சொறிக்கல்முனை, மல்வத்தை, வளத்தாப்பிட்டி மற்றும் மல்லிகைத்தீவில் உள்ள மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இக்கருத்தரங்கின் போது மாணவர்களுக்கு சிற்றூண்டிகளும் குளிர்பானமும் வழங்கப்பட்டது. இக்கருத்தரங்கின் முடிவில் பெற்றோர்களின் கருத்துக்கள் இவ் அமைப்பை ஊக்குவிப்பதாக அமைந்தது.
இக்கருத்தரங்கு இவ் அமைப்பின் உறுப்பினர்களின் நிதியைக் கொண்டே நடாத்தப்பட்டது. மேலும் சாதாரண, உயர்தர மாணவர்களுக்கான கருத்தரங்குகளை நடாத்தவும் திட்டமிட்டுள்ளது. நடைபெற்ற இக்கருத்தரங்கானது செ.செல்வக்குமரன் ஆசிரியரைக் கொண்டு நடாத்தப்பட்டது. இவ் அமைப்பின் இச்செயற்பாட்டுக்கு ஒத்துளைப்பு நல்கிய வீரமுனை R.K.M பாடசாலை அதிபர், சசிகரன் ஆசிரியர் மற்றும் இவ் அமைப்பினது எதிர்கால செயற்பாட்டிற்கு உதவுவதாகக் கூறிய சமூக சேவையாளர்களுக்கும் இவ் அமைப்பு நன்றி கூறிக்கொள்கின்றது.
தகவல்: அருளானந்தம் கஜேந்திர பிரிந்தன்