அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய பாற்குடபவனி
கிழக்கிலங்கை அம்பாறை வீரமுனையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய உற்சவத்தின் ஒன்பதாவது நாளாகிய இன்று சனிக்கிழமை (09/07/2016) தேர் திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக மு.ப 9.30 மணியளவில் பாற்குடபவனி இடம்பெற்றது.
வீரமுனை ஆண்டியர் சந்தியில் அமைந்துள்ள முத்துலிங்க பிள்ளையார் ஆலயத்திலிருந்து பாற்குடம் எடுத்து வரப்பட்டு சீர்பாததேவி கண்டெடுத்த ஸ்ரீ சிந்தாயாத்திரை பிள்ளையாருக்கு பாலாபிஷேகம் இடம்பெற்றது. முன்னே மேள தாளங்கள் முழங்க இரு யானையின் மீது பூசகர் பாற்குடம் எடுத்துவர அதன் பின்னே பல்வேறு கலை கலாசார நிகழ்வுகளுடன் பெண்கள் பாற்குடம் எடுத்து வந்து எம்பெருமானுக்கு பாலாபிஷேகம் இடம்பெற்றது.