வீரமுனை இராம கிருஷ்ண மகா வித்தியாலயத்தின் சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள்
கமு/சது/ வீரமுனை இராம கிருஷ்ண மகா வித்தியாலயத்தின் சர்வதேச சிறுவர் தின நிகழ்வுகள் அதிபர் S.கோனேசமூர்த்தி தலைமையில்சிறப்பாக இடம்பெற்றது.
இதன்போது வீரமுனை பிரதான வீதி வழியாக சிறுவர் தினம் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் இடம்பெற்றதுடன், மேலும் மாணவர்களுக்கு பேனாக்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டதுடன் ஒன்று கூடல் மண்டபத்தில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், அதிபர் ஆசிரியர்களின் கருத்துரைகளும் இடம்பெற்றது. அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு மதிய போசனமும் வழங்கப்பட்டது.