ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவ தேர்த்திருவிழா
கிழக்கிலங்கை அம்பாறை வீரமுனையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவ தேர்த்திருவிழா 29.06.2017 அன்று வியாழக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.
மாலை 5.00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பஞ்சமுக விநாயகருக்கு விசேட பூஜைகள் நடைபெற்று பூமழை சொரிய ஊர்வலகமாக கொண்டுவரப்பட்டு தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. இந்த தேர் உற்சவத்தில் இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும். கிழக்கிலங்கையின் வரலாற்றில் யானைகள் பவனியுடன் தேர்த்திருவிழா நடைபெறும் ஆலயமாக வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயம் திகழ்கின்றது. அத்துடன் கிழக்கிலங்கையின் தேரோடும் ஆலயம் என்ற புகழையும் வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயம் பெற்றுள்ளது. பெரும் துயரங்களையும் நெருக்கடிகளையும் கடந்து தம்மை எல்லா வளங்களுடன் வாழவைக்கும் சிந்தாயாத்திரைப் பிள்ளையார் பெருமானை மக்கள் திருத்தேர் பவனியில் சுமந்த காட்சி பக்தியின் உன்னதமாக விளங்கியது.