ஜீவ​ சமாதி அடைந்த​ ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் முத்துச்சப்பர பவனி

சித்துக்கள் பல​ புரிந்து காரைதீவு பதியில் ஜீவ​ சமாதி அடைந்த​ ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி அவர்களின் 64வது குருபூசை தின நிகழ்வினை முன்னிட்டு முத்துச்சப்பர பவனியொன்று இன்று காரைதீவில் சிறப்பாக இடம்பெற்றது.

சரியை,கிரியை,யோகம்,ஞானம் எங்கும் மேல் ஒங்க​ இசை,நடனம்,பரதம்,கூத்து,கும்மி என்பன​ ஆரவாரிக்க​ அடியவர்கள் பஜனை பாடிட​ சித்தர் முத்து சப்பரபவனியானது ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி ஜீவ​ சமாதி ஆலயத்திலிருந்து ஆரம்ப​மாகி சூரிய, சந்திரன் வரவேற்க, காண்டா மணி ஒலிக்க, நந்திவாகனத்தில் அமர்ந்திருந்து நந்தி பெருமான் வழிகாட்ட காரைதீவின் தேரோடும் வீதி வழியாக​ பவனிவந்தன.

காரைதீவு ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமியின் குருபூசையானது எதிர்வரும் 24ம் திகதி வெள்ளிக்கிழமை வெகுசிறப்பாக இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Sithar ratham 6

Sithar ratham 7

Sithar ratham 8

Sithar ratham 9

Sithar ratham 11

Sithar ratham 13

Sithar ratham 1

Sithar ratham 3

Sithar ratham 5

தகவல்: லோ.சுலெக்ஸன்

 

அதிகம் வாசித்தவை