காரைதீவில் சுவாமி விபுலானந்தரின் 68 வது சிரார்த்த தின நிகழ்வுகள்

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாந்தரின் 68வது சிரார்த்ததின நிகழ்வுகள் சுவாமி பிறந்த இடமாகிய காரைதீவில் அமையப் பெற்றுள்ள விபுலாந்த ஞாபகார்த்த நினைவாலயத்தில் இடம்பெற்றது.

இங்கு ஆராதனைகள் சுவாமியின் உருவச்சிலைக்கு பூமாலை அணிவித்தல், புஸ்பாஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு அதிதியாக அழைக்கப்பட்ட தேசிய கல்வி நிறுவகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.ரி.தியாகராஜா அவர்கள் சுவாமி பற்றிய சிறப்புரையை நிகழ்த்தினார்.

காரைதீவு மண்ணில் பிறந்து உலகம் போற்றும் உத்தமத்துறவியாய் காரைதீவுக்கு முகவரியாய் விளங்கிய சுவாமியின் சிரார்த்ததின நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர். சிறப்பாக இடம்பெற்ற சிரார்த்ததின நிகழ்வுகளை காரைதீவு விபுலாந்த ஞாபகார்த்த பணிமன்றத்தினர், காரைதீவு இந்து சமய விருத்தி சங்கத்தினர் மற்றும் காரைதீவு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தனர்.

தகவல்: லோ.சுலெக்ஸன்

அதிகம் வாசித்தவை