உகந்தை கடலில் ஜெலி மீன்கள், நீராடுவோர் அவதானம்
உகந்தை முருகன் ஆலயத்தை அண்டிய கடற்கரையோரத்தில் ஜெலி மீன்கள் (சொறிமுட்டை அல்லது நுங்குமீன்) கரையொதுங்குவதால், அக்கடலில் நீராடுகின்றவர்களும் ஏனைய தேவைகளை பூர்த்தி செய்கின்றவர்களும் அவதானத்துடன் செயற்படுமாறு
கடல் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் அம்பாறை மாவட்டஅதிகாரி கே.சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார். நச்சுத்தன்மையுடைய ஜெலி மீன்கள் உடலில் தொடுகை அடைவதால் அதிகவலி, ஒவ்வாமை ஏற்படுகின்றது. உடனடியாக முதலுதவிகளை பெறுவதன் மூலம் பாதிப்புக்களை தவிர்க்க முடியுமென்றும் அவர் கூறினார். இது தொடர்பில் எச்சரிக்கை துண்டுப்பிரசுரங்களையும் அம்பாறை மாவட்ட கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை குறித்த பகுதியில்ஆங்காங்கே செவ்வாய்க்கிழமை (07) மாலை ஒட்டியுள்ளனர்.