சொறிக்கல்முனை கொலிக்குரோஸ் மகா வித்தியாலயத்தின் ஆய்வு கூட திறப்பு விழா

சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட நாவிதன்வெளி கோட்டத்தில் அமைந்துள்ள சொறிக்கல்முனை கொலிக்குரோஸ் மகாவித்தியாலயத்தின்  ஆய்வு கூட திறப்பு விழா வித்தியாலய அதிபர் எம்.சிறியபுஸ்ப்பம் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரும்,மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளருமான எச்.ஈ.எம்.டவுள்யு.ஜீ.திசாநாயக்கா, சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் அப்துல் நஜீம், மற்றும் வலயக்கல்வி அதிகாரிகள், ஏனைய பாடசாலைகளின் அதிபர்கள் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.  இலத்திரனியல் கட்டடத்தினை பிரதம அதிதி நாடாவினை வெட்டி திறந்து வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை