மல்வத்தையில் கத்திக் குத்துக்கு இலக்காகி இளைஞன் பலி

அம்பாறை, மல்வத்தை தம்பிநாயகபுர பிரதேசத்தை சேர்ந்த செல்லத்துரை தயாளன் (வயது 24) என்ற இளைஞர் கத்திக் குத்துக்கு உள்ளாகி மரணமடைந்துள்ளார்.

கத்திக் குத்தில் மரணமடைந்த நபரும் அவரது நண்பரும்; சம்மாந்துறை 12ஆம் கொலனி பிரதேசத்தில் மரண வீட்டுக்கு சென்றுவிட்டு, மோட்டார் சைக்கிளில் திங்கட்கிழமை (13.07.2015) இரவு திரும்பிக்கொண்டிருந்தனர். இதன்போது இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளின் ஒளியை செலுத்திப் பார்த்தபோது, வீதியோரத்தில் இளைஞர்கள் சிலர் மதுபானம் அருந்திக்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், மேற்படி இருவருக்கும் இளைஞர் குழுவுக்குமிடையில் ஏற்பட்ட கைகலப்பில் செல்லத்துரை தயாளன் கத்திக் குத்துக்கு உள்ளாகி அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு இவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

இதேவேளை, இந்தக் கைகலப்பின்போது கத்திக் குத்தை மேற்கொண்டதாகக் கூறப்படும் நபரும் படுகாயமடைந்துள்ளார். இவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

அதிகம் வாசித்தவை