நெல்வயல்களில் கபில நிறத்தத்தியின் தாக்கம் அதிகரிப்பினால் பல ஏக்கர் வயல் நிலங்கள் பாதிப்பு

கடும் வரட்சி மற்றும் பனியின் காரணமாக மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்களில் வேளாண்மைப்பயிர்களுக்கு கபில நிறத் தத்தியின் தாக்கம் அதிகமாக இருப்பதனால் பல ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

கடும் வரட்சி மற்றும் பனியின் காரணமாக மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்களில் வேளாண்மைப் பயிர்களுக்கு கபில நிறத் தத்தியின் தாக்கம் அதிகமாக இருப்பதனால் பல ஏக்கர் வயல் நிலங்கள் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில மேட்டுவட்டை நாவிதன்வெளி வெல்லாவெளி மண்டூர் கமநலசேவைப்பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலே இந் நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதுடன் தற்போது இப்பகுதிகளில் நெல் வயல்கள் கதிர் காய் பருவத்தில் இருப்பதுடன் இப்பருவத்தில் இருக்கும் நெல் பயிர்களுக்கே கபிலநிறத் தத்தியின் தாக்கம் அதிகமாக இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு கபிலநிறத் தத்தியை கட்டுப்படுத்துவதற்கு பலதடவை கிருமிநாசினிகளை தெளித்தும் அதற்கும் கூட கட்டுப்படாமல் தொடர்ந்தும் வேளான்மைப் பயிரை தாக்கி வைக்கோலக்கி வருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

 

அதிகம் வாசித்தவை