எம்மவர் நிகழ்வுகள்

வாழ்வாதாரத்துக்கான சுயதொழில் கடன் வழங்கும் நிகழ்வு

வீரமுனை விதவைகள் நலன்புரி சங்கத்தின் வாழ்வாதாரத்துக்கான சுயதொழில் கடன் வழங்கும் நிகழ்வு நேற்று (14/08/2016) இடம்பெற்றது. இந்நிகழ்வில் ஆலோசகர் K.பொன்னம்பலம், கிராம உத்தியோகத்தர் மற்றும் சங்கத் தலைவர் மு.சுசிலா, பொருளாளர் பொற்கொடி ஆகியோர் கலந்துகொண்டதுடன் இதில் 50 பேர் பலனடைந்தனர்.

ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய தீர்தோற்சவம்

வரலாற்றுச் சிறப்புமிக்க அருள்மிகு வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 10ஆம் நாளாகிய ஞாயிற்றுக்கிழமை (10/07/2016) தீர்தோற்சவம் சிறப்பாக இடம்பெற்றது. 

வீரமுனை படுகொலையின் 26 ஆவது ஆண்டு நினைவு தினம்

அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் தஞ்சமடைந்திருந்த அப்பாவித் தமிழ் மக்கள் 155 பேர் படுகொலை செய்யப்பட்ட கொடூரத்தின் 26 ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று (12/08/2016) வெள்ளிக்கிழமை அனுட்டிக்கப்பட்டது.

சோழ இளவரசி சீர்பாததேவி அமைத்த ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தின் தேர்த்திருவிழா

கிழக்கிலங்கை அம்பாறை வீரமுனையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயம் பண்டைத் தமிழர்களின் வரலாற்றை உலகெங்கும் பறைசாற்றிய பிரசித்திமான விநாயகர் ஆலயங்களில் ஒன்றாகும். 

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு

வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலய கல்வி அபிவிருத்தி குழுவினால் 2016 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களின் நன்மை கருதி, இலவச கருத்தரங்கு ஒன்றை நேற்று (01.08.2016) திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் வீரமுனை R.K.M பாடசாலையில்நடாத்தியது.

அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய பாற்குடபவனி

கிழக்கிலங்கை அம்பாறை வீரமுனையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய உற்சவத்தின் ஒன்பதாவது நாளாகிய இன்று  சனிக்கிழமை (09/07/2016) தேர் திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக மு.ப 9.30 மணியளவில் பாற்குடபவனி  இடம்பெற்றது.

வீரமுனை சமூக மற்றும் கலாசார மேம்பாட்டு ஒன்றிய, நிதி சேகரிப்பிற்கான கிரிக்கெட் சுற்று போட்டியின் இறுதிப் போட்டி

வீரமுனை சமூக மற்றும் கலாசார மேம்பாட்டு ஒன்றியத்தினால் நிதி சேகரிக்கும் முகமாகவும் ஒன்றியத்தினுள் உதயமாகியுள்ள Black Sparrow புதிய அணியின் உருவாக்த்தினை முன்னிட்டும் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டி கடந்த மாதமளவில் ஆரம்பமானது.

ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் வேட்டைத் திருவிழாவும் சப்பரத் திருவிழாவும்

அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் எட்டாம் நாளான வெள்ளிக்கிழமை (08.07.2016) வேட்டைத் திருவிழா மற்றும் சப்பரத் திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.

ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய கொடியிறக்கமும் சண்டேஸ்வரர் பூசையும்

அருள்மிகு வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் 10ஆம் நாளாகிய ஞாயிற்றுக்கிழமை (11/07/2016) மாலை 6.00 மணிக்கு திரு ஊஞ்சல் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து  கொடியிறக்கம், சண்டேஸ்வரர் பூசை மற்றும் ஆச்சாரியார் உற்சவம் என்பன இடம்பெற்றன.

ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் சுமங்கலி பூசையும் தெற்பத் திருவிழாவும்

அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் ஏளாம் நாளான வியாழக்கிழமை (07.07.2015) சுமங்கலி பூசை மற்றும் தெற்பத்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.

அதிகம் வாசித்தவை