வீரமுனை சமூக மற்றும் கலாசார மேம்பாட்டு ஒன்றிய, நிதி சேகரிப்பிற்கான கிரிக்கெட் சுற்று போட்டியின் இறுதிப் போட்டி

வீரமுனை சமூக மற்றும் கலாசார மேம்பாட்டு ஒன்றியத்தினால் நிதி சேகரிக்கும் முகமாகவும் ஒன்றியத்தினுள் உதயமாகியுள்ள Black Sparrow புதிய அணியின் உருவாக்த்தினை முன்னிட்டும் மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்று போட்டி கடந்த மாதமளவில் ஆரம்பமானது.

இப் போட்டியின் இறுதிப் போட்டி நேற்று முன் தினம் (31.07.2016) ஞாயிறுக்கிழமை பி.ப 3.30 மணியளவில்  வீரமுனை விநாயகர் விளையாட்டு கழக மைதானத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வுக்கு அதிகளாக கு.நிமலேஸ்வரக் குருக்கள்(வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயம் ), S. கோணேசமூர்த்தி ( வீரமுனை R.K.M பாடசாலை அதிபர்), கி .ரவி (வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலய செயலாளர்), ஜோ .டிசந்தன் (வீரமுனை விநாயகர் விளையாட்டுக்கழக தலைவர்), கமல் (Kamal CD Centre உரிமையாளர்), யோகேந்திர(Uma Satellite  System உரிமையாளர்) ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்

இறுதிப் போட்டியில் விநாயகபுரம் விநாயகர் அணியும் சம்மாந்துறை SSC அணியும் மோதியது. இதில்   சம்மாந்துறை SSC அணி 38 ஓட்டங்களால் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றியது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற  விநாயகபுரம் விநாயகர் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. இதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய சம்மாந்துறை SSC அணி பத்து ஓவர் முடிவில்  8 விக்கெட்டை இழந்து 118 ஓட்டங்களை பெற்றது. 119 என்ற ஓட்ட இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய விநாயகபுரம் விநாயகர் அணி பத்து ஓவர் முடிவில்  9 விக்கெட்டை இழந்து 80 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 38 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவிக்கொண்டது. இச்சுற்று போட்டியில் எமது கிராமத்துக்கு அண்மையில் உள்ள 40 மேற்பட்ட அணிகள் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

சுற்று போட்டி நடைபெறுவதற்கு வெளிநாடுகளில் வசிக்கும் எமது நண்பர்கள் மற்றும் Kamal CD Centre, Uma Satellite  System என்பன நிதியுதவி வழங்குகின்றன. இச்சுற்று போட்டியின் பெறப்படும் நிதி எமது கிராமம் சார்பாக சமூக, கல்வி மற்றும் ஏனைய சேவைகளுக்கு பயன்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

crc 2

crc 7  

crc 7  

crc 7  

crc 7  

crc 7  

crc 7  

crc 7  

crc 7  

  

  

crc 7  

  

crc 7  

crc 7  

crc 7  

 crc 7  

  

crc 7  

crc 7  

crc 7  

crc 7  

 crc 7  

crc 7  

crc 7  

crc 7  

crc 7  

crc 7  

crc 7  

crc 7  

crc 7  

crc 7  

crc 7  

crc 7  

crc 7  

crc 7  

crc 7  

crc 7  

மேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும்

அதிகம் வாசித்தவை