தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு

வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலய கல்வி அபிவிருத்தி குழுவினால் 2016 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களின் நன்மை கருதி, இலவச கருத்தரங்கு ஒன்றை நேற்று (01.08.2016) திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் வீரமுனை R.K.M பாடசாலையில்நடாத்தியது.
இக் கருத்தரங்கின் வளவாளராக பிரபல ஆசிரியரும் தரம் 05 புலமைப் பரிசில் மாணவர்களுக்கு கற்பிப்பதில் சிறந்த அனுபவத்தைக் கொண்ட [பூ. பரமதயாளன் நடாத்தினர். இக் கருத்தரங்கில் வீரமுனை R.K.M பாடசாலை மாணவர்கள் மற்றும் அண்மைய கிராமமான வீரச்சோலை, மல்வத்தை, மல்வத்தை புதுநகரம், கணபதிபுரம் ஆகிய கிராமங்களில் அமைந்துள்ள பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டு பயன் பெற்றமை குறிப்பிடத்தக்கது.