சுவாட் அமைப்பின் மாதாந்த பிரதேச நிருவாக கூட்டம்
சுவாட் அமைப்பின் மாதாந்த பிரதேச நிருவாக கூட்டம் கடந்த 11.04.2018 அன்று வீரமுனை சுவாட் பிரதேச காரியாலயத்தில் பிரதேச காரியாலய உத்தியோகத்தர் S.கவிதா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் சம்மாந்துறை பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்(W.D.O) M.ஜெஸிலா மற்றும் நிவாரண சகோதரி(R.S) M.T.பஸ்மியா, A.G.S.அனிஷா ஆகியோர் பிரமுகராக கலந்து கொண்டனர்.
இதன் போது பெண்களுக்கு எதிரான பிரசினைகள், வீட்டு வன்முறை, பால்நிலை சமத்துவம், பிள்ளை வளர்ப்பு மற்றும் சமூக வரையறைக்குட்பட்டு பிள்ளைகளை வளர்த்தல் போன்ற பல விடயங்கள் தொடர்பாக நிருவாகளுக்கு விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டது.