அண்மையவர் நிகழ்வுகள்

மல்வத்தை விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களுக்கு சிட்னி உதயசூரியனினால் கற்றல் உபகரணம்

அவுஸ்ரேலியாவினை சேர்ந்த சிட்னி உதயசூரியன் மாணவர் உதவி மையத்தினால் மல்வத்தை கணேசபுரம் விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

மாவடிப்பள்ளி பிரதான வீதியில் விபத்து:இளைஞர் பலி!

இன்று (10.10.2015) பிற்பகல் 3.30 மணியளவில், காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாவடிப்பள்ளி பிரதான வீதியில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பயணித்த வேளை, வேனில் மோதுண்டதால் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்துக்களுக்கு விடுக்கப்பட்ட சவாலை எதிர்கொள்ள காரைதீவில் தேங்காய் உடைத்து பிராத்தனை

கொழும்பு பாபர் வீதி மாரியம்மனாலய தேர்த்திருவிழா மாற்றுமதத்தவரால் தடுத்து நிறுத்தப்பட்டதனூடாக இந்துக்களிள் பாரம்பரிய வழிபாட்டுமுறைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வளத்தாப்பிட்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் ஆசிரியர் தின கொண்டாட்டம்

வளத்தாப்பிட்டி  அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 06.10.2015 ம் திகதியன்று  ஆசிரியர் தின கொண்டாட்டம் வித்தியாலய அதிபர் திரு பொ.கமலநாதன் அவர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது.

சம்மாந்துறை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த தீ மிதிப்பு வைபவம்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற சம்மாந்துறை ஸ்ரீ பத்திரகாளியம்பாள் ஆலய வருடாந்த தீமிதிப்பு வைபவம் இன்று (13/10/2015) செவ்வாய்க்கிழமை ஆலயத் தலைவர் எஸ்.சுப்பிரமணியம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

சம்மாந்துறை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான வருடாந்த​ அலங்கார​ உற்சவம் இன்று ஆரம்பம்
சம்மாந்துறை தழிழ்க் குறிச்சியில் பன்னெடுங்காலமாக​ குடிகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான வருடாந்த​ அலங்கார​ உற்சவமானது இன்று புரட்டாதித் திங்கள் 17ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை(04) காலை 9.00 மணியளவில் திருக்கதவு திறத்தலுடன்​ ஆரம்பமானது. 
காரைதீவில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் இருபது மாணவர்கள் சித்தி.

நடைபெற்று முடிந்த​ ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் காரைதீவு பிரதேச பாடசாலைகளில் இருபது மாணவர்கள் சித்தி அடைந்துள்ளனர்.

காரைதீவு பிரதேசத்தின் ஐந்தாண்டு விளைவுசார் திட்டமிடல் தொடர்பான செயலமர்வு

காரைதீவு பிரதேசத்தின் ஐந்தாண்டு விளைவுசார் திட்டமிடல் தொடர்பான செயலமர்வு நடைபெற்றது.

சம்மாந்துறை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய​ 6ம் நாள் திருச்சடங்கு..

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற சம்மாந்துறை தழிழ்க் குறிச்சி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தான  வருடாந்த தீமிதிப்பு அலங்கார உற்சவத்தின் 6ம் நாள் திருச்சடங்கானது (09.10.2015) வெள்ளிக்கிழமை  நூற்றுக்கணக்கான​ பக்தடியார்கள் பங்குபற்றுதலுடன்  நடைபெற்றது.

சம்மாந்துறை வலயம் நடாத்திய சிறுவர்தின நிகழ்வு

சம்மாந்துறை கல்வி வலயம் நடாத்திய சர்வதேச சிறுவர்தின நிகழ்வு நாவிதன்வெளிக் கோட்டத்தில் உள்ள வீரத்திடல் அல்கிதாயா மாகா வித்தியாலயத்தில் வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.எஸ்.நஜீம் தலைமையில் இடம்பெற்றது.

அதிகம் வாசித்தவை