இந்துக்களுக்கு விடுக்கப்பட்ட சவாலை எதிர்கொள்ள காரைதீவில் தேங்காய் உடைத்து பிராத்தனை

கொழும்பு பாபர் வீதி மாரியம்மனாலய தேர்த்திருவிழா மாற்றுமதத்தவரால் தடுத்து நிறுத்தப்பட்டதனூடாக இந்துக்களிள் பாரம்பரிய வழிபாட்டுமுறைக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதனையும் நாடு பூராகவும் இந்துக்கள் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ள இன்று வெள்ளிக்கிழமை நாட்டிலுள்ள 1008 ஆலயங்களில் தேங்காய் உடைத்து பிரார்த்தனையுடனான விசேட பூஜை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக இடம்பெற்றது.

 இதனை இலங்கை இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு இவ் ஏற்பாட்டைச் செய்திருந்தது.

சகிப்புத்தன்மையும் பரந்த மனப்பான்மையும் கொண்ட இந்துக்களாகிய நாம் பிரார்த்தனையாலும் ஜனநாயகரீதியீலும் இன்றைய அச்சுறுத்தல்களை எதிர்கொண்டால் மாத்திரமே பலம் பொருந்திய சமுதாயமாக வாழமுடியும்.
தேங்காய உடைத்து பிரார்த்தனை மற்றும் பூஜை செய்வதனூடாக இந்துக்களுக்கு எதிரான இச்சவால்களை எதிர்கொள்ளுவதற்குத்தேவையான வல்லமையைப் பெறலாமென்பது இவ்விசேட நிகழ்வின் எதிர்பார்ப்பாகும்.

காரைதீவில் அனைத்து இந்து ஆலயங்களிலும் இன்று வெள்ளிக்கிழமை காலை தேங்காய் உடைத்து பிரார்த்தனை மற்றும் பூஜை செய்தல் நிகழ்வு இடம்பெற்றது. 
அதற்கமைய காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயம், ஸ்ரீ சித்தானைக்குட்டி சுவாமி ஆலயம், காரையடி பிள்ளையார் ஆலயம், நாராயணன் சுவாமி ஆலயம், ஸ்ரீ வீரபத்திரர் சுவாமி ஆலயம், நந்தவன சித்தி விநாயகர் ஆலயம், மகா விஷ்ணு ஆலயம், மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயம், பாலையடி வால விக்னேஸ்வர ஆலயம், ஆதிசிவன் ஆலயம், ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயம், அரசடிப்பிள்ளையார் ஆலயம்  ஆகிய ஆலயங்களில் பூசைகளின் பின்னர் தேங்காய உடைத்து பிரார்த்தனை செய்யப்படதுடன் பொது மக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இதற்கான சகல ஏற்பாடுகளையும் இந்து அமைப்புகளின் பிரதம ஏற்பாட்டாளர் இரா.குணசிங்கம் அவர் மேற்கொண்டதோடு அம்பாரை ஹிந்து சுயம் சேவக சங்க மற்றும் காரைதீவு இந்து சமய விருத்தி சங்கத்தினருடன் சகல ஆலய பரிபாலன சபையினர் சிறப்பாக ஏற்பாடு செய்து நடாத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாளை 17ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 4மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இந்துக்குருமார்கள் ஆலய அறங்காவலர்கள் இந்து அமைப்புகளின் தலைவர்கள் பெரியோர்கள் தலைமையில் இவ்வறவழி ஆர்;ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்நகிழ்வில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

 1008 temple 2

1008 temple 3

1008 temple 41008 temple 5
1008 temple 6
1008 temple 7
1008 temple 8
 

அதிகம் வாசித்தவை