காரைதீவில் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் இருபது மாணவர்கள் சித்தி.
நடைபெற்று முடிந்த ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் காரைதீவு பிரதேச பாடசாலைகளில் இருபது மாணவர்கள் சித்தி அடைந்துள்ளனர்.
காரைதீவு இராம கிருஸ்ண சங்க பெண்கள் பாடசாலையில் பத்து மாணவர்களும் காரைதீவு இராமகிருஸ்ண சங்க ஆண்கள் பாடசாலையில் எட்டு மாணவர்களும் மற்றும் காரைதீவு விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் இரண்டு மாணவர்களும் சித்தி அடைந்துள்ளனர்.