எம்மவர் நிகழ்வுகள்
வீரமுனையிலிருந்து ஏழு கலை பட்டதாரிகளுக்கு பட்டமளிப்பு
வீரமுனையிலிருந்து இம்முறை வெளிவாரியாக கலைப்பிரிவில் ஏழு மாணவர்கள் 15.09.2015 அன்று கொழும்பு BMICH மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் வைத்து பட்டமளிக்கப்பட்டனர்.
வீரமுனை படுகொலையின் 25 ஆவது ஆண்டு நினைவு தினம் - நினைவுத் தூபிக்கு விளக்கேற்றி அஞ்சலி
வீரமுனையில் 1990-08-12ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டவர்களின் 25ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, ஆலயத்துக்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
வீரமுனை இராம கிருஸ்ண வித்தியாலயத்தில் மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வு
செப்டெம்பர், 10 முதல் 16 வரை இலங்கை அரசினால் நாடளாவிய ரீதியில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தேசிய நுளம்புகள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு நுளம்புகளை கட்டுப்படுத்தும் வகையில் விசேட நடவடிக்கைகள் நாடெங்கிலும் நடத்தப்பட்டு வருகின்றன.
வீரமுனை படுகொலை நினைவுதினம் இன்று – ஆலயங்களில் விசேட வழிபாடுகள்
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வீரமுனையில் 1990-08-12ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டவர்களின் 25ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று அமைதியான முறையில் அனுஸ்டிக்கப்பட்டது.
வீரமுனை விநாயகர் விளையாட்டுக் கழகத்திற்கான கழக சீருடை வழங்கும் நிகழ்வு
கல்முனை மாணவர் மீட்புப் பேரவையின் தலைவரும் பொறியியலாளருமான கலாநிதி எஸ்.கணேஷ் அவர்களினால் வீரமுனை விநாயகர் விளையாட்டுக் கழகத்திற்கான கழக சீருடை (ஜெர்சி) அன்பளிப்பு நிகழ்வு கழக மைதானத்தில் இடம்பெற்றது.
வீரமுனை சமூக அபிவிருத்தி அமைப்பினால் நடாத்தப்பட்ட மாபெரும் இலவசக் கருத்தரங்கு
மேற்படி அமைப்பானது கல்வி மற்றும் சமூக அபிவிருத்தியை இலக்காக கொண்டு தோற்றுவிக்கப்பட்டது. அந்தவகையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு
வீரமுனையிலிருந்து மண்டூர் தலத்திற்கான பாதயாத்திரை நிகழ்வு
மண்டூர் முருகன் ஆலய வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு, வீரமுனையிலிருந்து பக்தர்கள் காவடியெடுத்தல், அலகேற்றுதல் போன்ற நேர்த்தியினை நிறைவேற்றும் முகமாக நேற்று மண்டூர் ஆலயத்தை நோக்கி புறப்பட்டு சென்றனர்.
இராம கிருஷ்ண மகா வித்தியாலய சேவைநலன் பாராட்டு விழா - 2015
கமு/சது/வீரமுனை இராம கிருஷ்ண மகா வித்தியாலய அதிபர் திரு S.சந்திரமோகன் அவர்களின் ஓய்விற்கான சேவை நலன் பாராட்டு விழா 30.07.2015 அன்று பி.ப 12.00 மணிக்கு பாடசாலை ஆராதனை மண்டபத்தில் இடம்பெற்றது.
பொதுத்தேர்தலில் வீரமுனையில் 63.32% சதவீதமான மக்கள் வாக்களிப்பு
இலங்கை நாடாளுமன்றத்துக்கான உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான 15-வது பொதுத்தேர்தல் வாக்களிப்பு அனைத்து பகுதிகளிலும் இன்று காலை (17.08.2015) 7.00 மணிக்கு ஆரம்பமாகி 4.00 மணிக்கு நிறைவடைந்தது.
வீரமுனையிலிருந்து சொறிக்கல்முனைக்கு செல்லும் நாற்சந்தியில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து
சம்மாந்துறையில் இருந்து சொறிக்கல்முனைக்கு செல்ல வந்த மோட்டார் சைக்கிளும் வீரமுனை ஆண்டியர் சந்தியில் இருந்து வீரமுனையை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.