காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தின் கழக இரவும் வருடாந்த கழக ஒன்றுகூடலும்

காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தின் கழக இரவும் வருடாந்த கழக ஒன்றுகூடலும் 27.12.2015 அன்று, பிற்பகல் 6.30 மணியளவில், காரைதீவு கண்ணகி சனசமூக நிலையத்தில் கழகத்தலைவர் திரு.எஸ்.தங்கவடிவேல் தலைமையில் ஆரம்பமானது.

இதன்போது அதிதிகளாக கௌரவ. கே. கோடீஸ்வரன் (பாராளுமன்ற உறுப்பினர்), திரு. எஸ். இராமகிருஷ்ணன் (முன்னாள் பிரதேச செயலாளர், காரைதீவு), திரு. கே. சதிசேகரன் (உதவிப் பிரதேச செயலாளர்) பி.இராஜமோகன் (பிரதம​ பொறியியலாளர், வீதி அபிவிருத்தி திணைக்களம்) என்.சசி நந்தன் (நிறைவேற்று பொறியியலாளர்,வீதி அபிவிருத்தி திணைக்களம்) மற்றும் விவேகானந்தா விளையாட்டுக்கழக உறுப்பினர்களும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

vsc 1

 vsc 1

 vsc 1

 vsc 1

 vsc 1

 vsc 1

மேலும் அதிதிகளை வரவேற்றல், மங்கள விளக்கேற்றல், இறை வணக்கம், கழக கீதம், வரவேற்புரை, தலைமையுரை, சாதனையாளர் பாராட்டு, புலமையாளர் கௌரவிப்பு, அதிதிகள் உரை, புதிய அங்கத்தவர் பதிவு, புதிய நிர்வாகத் தெரிவு, நன்றியுரை, விருந்துபசாரம் என்பன இடம்பெற்றது.

புதிய நிர்வாக சபை உறுப்பினர்களக​

தலைவர்: எஸ்.நேசராசா (நில​ அளவையாலர்)
செயலாளர்: கெ.உமாரமணன் (தொழிநூட்ப​ உத்தியோகத்தர்)
பொருளாளர்: ஜெ.சோபிதாஸ் (ஆசிரியர்)

மற்றும் முகாமையாளர், கணக்காய்வாளர், நிர்வாக சபை உறுப்பினர்கள் துறைசார் தலைவர்களும் புதியதாக தெரிவுசெய்யப்பட்டனர்.

தகவல்:பத்மராஸ் கதிர் 

 

அதிகம் வாசித்தவை