காரைதீவு.ஓர்க் இன் புதியதோர் சிந்தனை Transcend இன் அறிமுக நிகழ்வு
காரைதீவின் இணைய நுழைவாயில் காரைதீவு.ஓர்க் இன் புதியதோர் சிந்தனையின் வெளிப்பாடாக உருவாகிய Transcend (வரையறைகளைத் தாண்டி....) நிகழ்ச்சித்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு
20ம் திகதி ஞாயிறன்று பிற்பகல் 2.00 மணியளவில் காரைதீவு விபுலாநந்தா மத்திய கல்லுரியின் கேட்போர் கூடத்தில் எளிமையான முறையில் இடம்பெற்றது.
இவ் நிகழச்சிதிட்ட அறிமுக நிகழ்வானது இணையத்தள முகாமைத்துவ பணிப்பாளர் திரு.மென்டிசப்பு பிரசாத் அவர்களின் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் எமது இணையத்தள போசகரும் பிரதேச செயலாளருமான திரு.எஸ்.ஜெகராஜன் அவர்கள் கலந்து சிறப்பித்ததோடு மேலும் இணையத்தள ஆலோசகர்கள் மற்றும் இணையக்குழுவின் சிரேஸ்ட கனிஸ்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
உறுப்பினர்கள் பதிவு இடம்பெற்ற பின்னர் இவ் Transcend (வரையறைகளைத் தாண்டி....) நிகழ்ச்சித்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வானது இறைவணக்கத்துடன் ஆரம்பமாகியதுடன் நிகழ்ச்சி திட்டம் பற்றிய அறிமுகத்தை இணையத்தளத்தின் ஸ்தாபக இணையக்குழு உறுப்பினரும் பிரதிக்கல்விபணிப்பாளருமான திரு.எஸ்.சுரனுதன் அவர்கள் வழங்க பின்னர் தொடர்ச்சியாக இணையத்தளத்தின் சிரேஸ்ட உறுப்பினரும் வைத்திய அதிகாரியுமான திரு.என்.அகிலன் அவர்கள் "ஏன் காரைதீவு.ஓரக்" எனும் தலைப்பில் விரிவுரையினை மேற்கொண்டிருந்தார்.
இணையத்தள முகாமைத்துவ பணிப்பாளரும் வைத்திய அதிகாரியுமான திரு.மென்டிசப்பு பிரசாத் படங்களை எளிய முறையில் எடிற் செய்தல் பற்றியும் இணையத்தளத்தின் சிரேஸ்ட உறுப்பினர் திரு.ந.அமரீசன் பிரசுரித்தல் நியதிகள் பற்றியும் மற்றும் இணையத்தளத்தின் உறுப்பினர் திரு.லோ.சுலெக்ஸன் அவர்கள் செய்திகளை பிரசுரித்தல் தொடர்பாகவும் தத்தமது Presentation நிகழ்த்தினர். அத்துடன் நிகழ்வு முற்றுபெற்றதுடன் Transcend (வரையறைகளைத் தாண்டி....) நிகழ்ச்சிதிட்டம் தொடர்ச்சியாக எதிர்காலத்தில் சிறப்பாக இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.