தைத்திருநாளில் காரைதீவில் அதிகாலையில் காயத்திரி மந்திர ஊர்வலம்

இந்துக்களின் மரபுகள் சம்பிரதாயங்கள் பண்பாடு கலாச்சார விழுமியங்களை பேணிப்பாதுகாக்கும் முகமாவும் எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு செல்லும் பொருட்டும் காரைதீவு இந்து சமயவிருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில்

இந்துக்களுக்கு ஆண்டின் முதல் நாள் தைத்திருநாளில் காரைதீவில் அதிகாலையில் காயத்திரி மந்திர ஊர்வலம் இடம்பெற்றது. அதிகாலை காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி காரைதீவின் வீதிகளினூடாக ஊர்வலம் வலம் வந்து பின்னர் ஆலயத்தை வந்தடைந்து வாழ்துரை ஆசியுரை மற்றும் சத்தியபிரமாண நிகழ்வு இடம்பெற்றது.

 

காயத்திரி மந்திரமும் அதன் விளக்கமும்

காயத்திரி மந்திரம்:

ஓம் பூர் புவஸ்ஸூவ
தத் சவிதுர்வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோ ந: ப்ரசோதயாத்

காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க்க் காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும்.

உபநயனம் செய்யப்பட்டவர்கள் நாள்தோறும் காயத்திரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும். வேத மந்திரங்கள் அனைத்துமே செய்யுளைப் போல் உச்சரிப்பதற்கு ஏற்றபடி ஒலியின் அளவை உடையவை. ‘காயத்திரி’ என்னும் ஒலியின் அளவைக் கொண்டு இந்த மந்திரம் இயற்றப்பட்டதால் இதற்கு “காயத்திரி மந்திரம்” என்ற பெயர் ஆயிற்று.

garthiri 2

garthiri 3

garthiri 4

garthiri 5

 

அதிகம் வாசித்தவை