மல்வத்தையில் வெள்ளத்துள் மூழ்கிய பாடசாலை : மாணவர் இடம்பெயர்வு

அம்பாறை மாவட்டத்தில் தொடரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்துள் மல்வத்தை சீர்பாததேவி வித்தியாலயம் முழ்கியுள்ளது. இதனால் மாணவர்கள் அனைவரும் நேற்று வியாழக்கிழமை பாடசாலைக்குச் செல்லமுடியாது அருகிலுள்ள விபுலானந்த மகா வித்தியாலயத்திற்கு அவசர அவசரமாக மாற்றப்பட்டனர்.

நேற்றுமுன்தினம் பெய்த அடைமழை காரணமாக அமபாறை மாவட்டமெங்கும் தாழ்நிலப்பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டமை தெரிந்ததே. நேற்றும் கனமழை தொடர்ந்ததுடன் வானம் மப்பும் மந்தாரமுமாக காட்சியளித்தது. குறிப்பாக அம்பாறைக்கு கிழக்கேயுள்ள மல்வத்தைக்கிராமமும் முற்றாக வெள்ளப்பாதிப்புக்குள்ளாகியது. அங்குள்ள புதிய ஆரம்பப்பாடசாலையான சீர்பாததேவி வித்தியாலயம் வெள்ளத்துள் சிக்குண்டுள்ளது. பாடசாலைச்சுற்றாடலும் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. பாடசாலையும் சூழலும் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன. 

 

mal 2

mal 2

mal 2

(திரு.வி.ரி.சகாதேவராஜா)

அதிகம் வாசித்தவை