மல்வத்தையில் காணாமல் போன குடும்பஸ்தர் எலும்புக் கூடாக கண்டெடுப்பு

கடந்த மாதம் 28 ஆம் திகதி காணாமல் போன நபர் ஒருவரின் எலும்புக் கூடு இன்று சனிக்கிழமை அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்வத்தைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மல்வத்தை மல்லிகைத்தீவு காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடு தனது கணவருடையது என அவரது மணைவியான 42 வயதுடைய இளையதம்பி ராணி அடையாளம் காட்டியுள்ளார். காட்டில் மனித எலும்புக் கூடு ஒன்று கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இன்று காலை அங்கு சென்ற பொலிஸார் மனித எலும்புக் கூடொன்றை கண்டெடுத்துள்ளனர்.

அந்த எலும்புக் கூடு கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் வீட்டை விட்டுச் சென்று காணாமல் போயிருந்த மல்வத்தை 1 தம்பிநாயகபுரத்தைச் சேர்ந்த 50 வயதான தனது கணவரான மகாலிங்கம் வேலாயுதம் என எலும்புக் கூட்டில் அணிந்திருந்த ஆடைகளை வைத்து அவரது மனைவி அடையாளம் காட்டினார்.

தற்சமயம் பரிசோதனைக்காக எலும்புக் கூடு அம்பாறை பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், மல்வத்தைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை