பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வனவாச நிகழ்வு

பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தின் வனவாச நிகழ்வானது நேற்றைய​ தினம் (23.09.2015) வெகுசிறப்பாக​ இடம்பெற்றது.

பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்திலிருந்து ஆரம்பமான வனவாச நிகழ்வு மணல்சேனை, நற்பிட்டிமுனை, சேனக்குடியிருப்பு வழியாக சென்று மீண்டும் பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்தை சென்றடைந்தது. இவ் வனவாச நிகழ்வில் நேர்த்திகடனை நிறைவேற்றும் பொருட்டு பக்த​ அடியார்கள் காவடி,தீ சட்டி ஏந்துதல் என்பன இடம்பெற்றது. இவ்வாறு தீ சட்டி ஏந்தி நேர்த்திகடனை நிறைவேற்றிய நட்பிட்டிமுனையை சேர்ந்த 54 வயதுடைய யோகேஸ்வரி என்பவர் நற்பிட்டிமுனை முருகன் ஆலயத்தில் மயங்கி வீழ்ந்துள்ளார். அவரை அங்கிருந்து கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துவரும் வேளை மரணமடைந்துள்ளார். 

இன்று ஆலயத்தில் தவநிலை இடம்பெறவுள்ளதுடன் நாளை மறுதினம் தீமிதிப்பு உற்சவத்துடன் வருடாந்த உற்சவம் நிறைவுபெறும். இந்த நிகழ்வுகளில் இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

unnamed 48

unnamed 49

unnamed 50

unnamed 52 1

unnamed 53

unnamed 55

unnamed 56

 

அதிகம் வாசித்தவை