சம்மாந்துறை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த உற்சவம்

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற சம்மாந்துறை தமிழ்க்குறிச்சி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த தீமிதிப்பு அலங்கார உற்சவம் வரும் 04 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி 13ஆம் திகதி தீமிதிப்பு வைபவத்துடன் நிறைவடையும்.

04ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 7மணிமுதல் 9மணிவரையுள்ள சுபவேளையில் ஆலயதிருக்கதவு திறத்தலுடன் இவ்வருட உற்சவம் ஆரம்பமாகிறதென ஆலய பரிபாலனசபைத்தலைவர் சீனித்தம்பி சுப்பிரமணியம் தெரிவித்தார். உற்சவகாலகிரியைகள் யாவும் ஆலய பிரதமபூசகர் சி.சதாசிவம் மற்றும் ஆலய பூசகர் கு.லோகேஸ் ஆகியோர் தலைமையில் நடைபெறவுள்ளது.

06ஆம் திகதி பாற்குடபவனி ஸ்ரீ கோரக்கர்பிள்ளையார் ஆலயத்திலிருந்து ஆரம்பமாகி பத்திரகாளியம்பாள் ஆலயத்தை வந்தடையும். 10ஆம் திகதி வீரகம்பம் வெட்டுதல் 12ஆம் திகதி நோற்புக்கட்டலுடன் 13ஆம் திகதி காலையில் தீமிதிப்பு இடம்பெறும். தொடர்ந்து அன்னதானமும் இடம்பெறும். மேலும் 22ஆம் திகதி வழமைபோல கௌரிவிரதம் அனுஸ்டிக்கப்படும்.

அதிகம் வாசித்தவை