சம்மாந்துறை பிரதேசத்தில் இடியுடன் கூடிய மழை - மின்னல் தாக்கி ஒருவர் மரணம்

இன்று பிற்பகல் சம்மாந்துறை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் பெய்த புயல் காற்றும் இடியுடன் கூடிய மழையினால் வீடுகளின் கூரைகள் சேதமடைந்ததுடன் மின்னல் தாக்கி நபரொருவர் பலியானார். 

சம்மாந்துறை தென்னம் பிள்ளை கிராமத்தில் செங்கல்  சூளையில் வேலை செய்து கொண்டிருந்த அலியார் முகம்மது இப்ராஹீம் என்பவர் இன்று மாலை மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி  அவ்விடத்திலேயே மரண மடைந்துள்ளார். இன்று மாலை (11.09.2015) சுமார் 4.30 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. புளக்  ஜே முதலாம் பிரிவில் வசித்திவரும் இவருக்கு வயது 57 ஆகும்  4 பிள்ளைகளின் தந்தையான இவர் ஒரு கூலித்தொளிலாளியாவார் இவருக்கு இரு ஆண்பிள்ளைகளும் இரு பெண் பிள்ளைகளும் உள்ளது.

 

rainsammanthurai 2

rainsammanthurai 3

rain 1

 

அதிகம் வாசித்தவை