தாந்தா மலை ஸ்ரீ முருகன் ஆலயத்திலுள்ள பிள்ளையார் மலையில் புதிதாக விநாயகர் சிலை திறப்பு

கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு தாந்தா மலை ஸ்ரீ முருகன் ஆலய பிள்ளையார் மலையில், வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் அருள் ஆசியுடன், வீரமுனையை சேர்ந்த இங்கிலாந்து லிவர்பூல் பொதிகை நிறுவனத்தினரால் சுமார் 21 அடி உயரமுள்ள விநாயகர் திருவுருவச்சிலை திறந்து வைக்கபட்டது.

தாந்தா மலை ஸ்ரீ முருகன் ஆலய வருடாந்த கொடியேற்ற தினமான 11.07.2015 அன்று சிற்பாச்சாரி திரு.ஸ்ரீகரன் தலைமையில் வடிமைக்கப்பட்ட இத் திருவுருவச்சிலையானது பொதுமக்களின் அருளாசிக்காக கண் திறந்து வைக்கப்பட்டது. 

 

அதிகம் வாசித்தவை