வீரமுனையிலிருந்து கதிர்காம கொடியேற்றத்தை காண செல்லும் பாதயாத்திரிகர்கள்
வீரமுனையிலிருந்து கதிர்காம முருகனின் கொடியேற்றத்தை காண ஒரு தொகை பக்த அடியார்கள் இன்று (06/07/2015) வீரமுனை அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து உகந்தை முருகன் ஆலயத்தை சென்றடைந்தனர்.
இவர்கள் உகந்தை முருகன் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டு கதிர்காமத்தை நோக்கி தங்கள் பாதயாத்திரையை ஆரம்பிக்க உள்ளனர். கதிர்காம தலத்தின் உற்சவங்கள் எதிர்வரும் 17 ஆம் திகதி தொடக்கம் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.