ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் வேட்டைத் திருவிழாவும் சப்பரத் திருவிழாவும்

அருள்மிகு ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தின் எட்டாம் நாளான திங்கட்கிழமை (22.06.2015) வேட்டைத் திருவிழா சப்பரத் திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.

வழமைபோன்று தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை மற்றும் சுவாமி உள்வீதியுலா, வெளிவீதியுலா இடம்பெற்றதுடன் மாலை 4.00 மணிக்கு வேட்டைத் திருவிழா சிறப்பாக இடம்பெற்றதுடன் அதனைத் தொடர்ந்து மாலை 7.00 மணிக்கு லண்டனைச் சேர்ந்த வே.கோபி அவர்களால் புதிதாக நிர்மானிக்கப்பட்டு அன்பளிப்பு செய்யப்பட்ட சப்பரத்திற்கு பதிலாக பயன்படுத்தப்படும் சகடையின் வெள்ளோட்டம் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து எம்பெருமான் புதிதாக நிர்மானிக்கப்பட்ட சகடையில் அமர்ந்து கிராம வீதிகளில் வலம்வந்து அடியார்களுக்கு அருள்பாலித்தார். 

 

மேலும் படங்களுக்கு கிழே அழுத்தவும்

கமரா - 01

கமரா - 02

 

 

அதிகம் வாசித்தவை