மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கல் மற்றும் பாராட்டி கௌரவித்தல் நிகழ்வு
வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய, சமூக மற்றும் கல்வி அபிவிருத்தி குழுவினால், வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு, இன்று காலை 10.00 மணிக்கு வீரமுனை R.K.M வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் புலமைப் பரிசில் பரீட்சை, க .பொ .த சாதாரண பரீட்சை ஆகியவற்றில் சித்தியடைந்த மற்றும் பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர்களை பாராட்டி நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.
மேலும் படங்களுக்கு இங்கே அழுத்தவும்