திருவாசகம் முற்றோதல் நிகழ்வு
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தினை முழுமையாக ஓதுகின்ற, திருவாசகம் முற்றோதல் நிகழ்வு நேற்று முன்தினம் (03.01.2016) ஆம் திகதி, வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் இடம்பெற்றது.
நந்திக்கொடி ஏற்றல் நிகழ்வை தொடர்ந்து மணிவாசக பெருமானை பல்லக்கில் சுமந்து கிராம வீதி வலம் வருதல் இடம்பெற்று திருவாசகம் ஓதப்பட்டது. இந்நிகழ்வில் அதிகளவான பக்தர்கள் மற்றும் ஓதுவார்கள் கலந்துகொண்டனர்.