நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் மருத்துவ பீடத்துக்கு மாணவன் தெரிவு

நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் மருத்துவ பீடத்துக்கு மாணவன் ஒருவன் தெரிவு செய்யப்பட்டுள்ளான். வீரமுனையை சேர்ந்த நாகராஜா சுகிர்தன் என்னும் மாணவன், மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரியில் உயர் தர பரீட்சைக்கு தோற்றியிருந்தார். அண்மையில் வெளியிடப்பட்ட உயர் தர பரீட்சை முடிவுகளின்  பிரகாரம், இரண்டு A சித்திகள் மற்றும் ஒரு B சித்தி பெற்று, மாவட்ட ரீதியில் 23ம் இடத்தினை பெற்று மருத்துவ பீடத்துக்கு தெரிவாகியுள்ளார். எழு வருடங்களுக்கு பின்னர் மாணவன் ஒருவன் மருத்துவ பீடத்துக்கு தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அவருக்கு எமது இணைய குழுவின் சார்பான வாழ்த்துக்கள்.

 

அதிகம் வாசித்தவை