கல்வி பொது தராதர சாதாரண பரீட்சைகள் நாடளாவியரீதியில் இன்று ஆரம்பம்

கல்வி பொது தராதர சாதாரண பரீட்சைகள் நாடவியரீதியில் இன்று ஆரம்பமானது. இப்பரீட்சை எதிர்வரும் 17ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாட்டிலுள்ள 4670 பரீட்சை நிலையங்களில் இடம்பெறுகிறது.
இப் பரீட்சைக்கு 403444 பாடசாலை பரீட்சார்த்திகளும் 261271 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் என 664715 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். இதனை முன்னிட்டு வழமை போன்று வீரமுனை R.K.M பாடாசாலையும் பரீட்சை நிலையமாக செயற்படுகின்றது. இதன் படி பாடசாலை பரீட்சாத்திகளுக்கு ஒரு மண்டபமும் வெளிவாரி பரீட்சாத்திகளுக்கு ஒரு மண்டபமும் பரீட்சை நிலையமாக அமைக்கப்பட்டுள்ளது. இவ் வருடம் வீரமுனை R.K.M பாடசாலை சார்பாக 49 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர். இவர்களுக்கு எமது இணையக் குழுவின் சார்பான வாழ்த்துக்கள்.