காரைதீவு 2009 உயர்தர மாணவர்களினால் O/L மாணவர்களுக்கான முன்னோடி பரீட்சை
காரைதீவு 2009 உயர்தர மாணவர் ஒன்றியமானது எமது பிராந்திய மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை இலக்காக கொண்டு கற்றல் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வகையில் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
அந்தவகையில் இம்முறை க/பொ/த சாதாராண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான கணித, விஞ்ஞான பாடங்களுக்கான முன்னோடி பரீட்சை ஒன்றை காரைதீவில் மாத்திரமன்றி வீரமுனை இராமகிருஸ்ண மகா வித்தியாலயத்திலும் கடந்த செவ்வாய்கிழமை 29.09.2015 அன்று நடாத்தியது. மேலும் இப்பரீட்சையில் அதிகளவு புள்ளிகளை பெறும் மாணவர்களுக்கு பரிசுப்பொருட்களும் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.