வீரமுனையில் இடம்பெற்ற சிறுவர் தின நிகழ்வுகள்
சர்வதேச சிறுவர் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது. சிறுவர்களுக்கான நட்புறவான சூழல் உலகை மிளிரச் செய்யும் அழகிய தேசம் என்ற தொனிப் பொருளின் கீழ் இம்முறை சர்வதேச சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது.
உலக நாடுகளில் வாழ்கின்ற சிறுவர்களிடையே புரிந்துணர்வையும், தூரநோக் கான பொது நல திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுப்பதற்குமென ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானப்படி ஒவ்வொரு ஆண்டும் ஒவ்டோபர் மாதம் (01) முதலாம் திகதி சர்வதேச சிறுவர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இதனை முன்னிட்டு வீரமுனை இராம கிருஸ்ண மகா வித்தியாலயத்தில் சிறுவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் மற்றும் இனிப்பு பண்டங்கள் வழங்கி கொண்டாடபட்டது.