விநாயகர் சட்டி விரதம் சிறப்பாக அனுடிக்கப்படுகின்றது
வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் விநாயகர் சட்டி விரதம் சிறப்பாக அனுடிக்கப்படுகின்றது. விநாயக சட்டி விரதம் இந்து மக்களினால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் ஒன்று.
இது கார்த்திகை மாத தேய்பிறைப் பிரதமை முதல் மார்கழி மாத வளர்பிறைச் சட்டித் திதி வரையுள்ள இருபத்தொரு நாட்கள் அனுட்டிக்கப்படும் விரதமாகும். இதை பெருங்கதை விரதம், பிள்ளையார் கதை விரதம் எனவும் அழைப்பர். இவ் விரத காலத்தில் வரதபண்டிதரின் பிள்ளையார் கதை, விநாயக புராணம் படித்தல் என்பன நெடுங்காலமாகப் பேணப்பட்டு வருகின்றது.