சம்மாந்துறை வங்களாவடியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே மரணம்

சம்மாந்துறை வங்களாவடியில் இன்று (08) அதிகாலை இடம் பெற்ற வாகன விபத்தில் சம்மாந்துறை சேர்ந்த 62 வயதினை உடைய வயோதிபர் ஒருவர் ஒருவர் ஸ்தலத்திலேயே மரணமடைந்துள்ளார்

இன்று அதிகாலை வயலுக்கு பசளை எறிவதற்காக பசளை பக்கட்டுகளுடன் சம்மாந்துறையிலிருந்து மல்வத்தை நோக்கி சென்ற வண்டில் ஒன்றுடன் பின்னால் வந்த கொள்கலன் லொறி ஒன்று மோதியதால் சம்மாந்துறையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஆதம்பாவா அப்துல் குத்தூஸ் அவ்விடத்திலேயே மரணமானார்.

வண்டில் மாடுகளில் ஒன்று விபத்தில் சிக்கி குடல் வெளியே பீறிட்ட நிலையில் மீட்கப்பட்டது. ஆனால் இருமாடுகளும் உயிரோடு உள்ளன. அங்குவந்தோர் மாடுகளைக்கண்டதும் பரிதாபத்தோடு பார்வையிட்டதைக் காணக்கூடியதாயிருந்தது. வண்டில் சின்னாபின்னமாக சேதமாக்கப்பட்டு வாய்க்காலுக்குள் வீசப்பட்டுள்ளது. பொதுமக்கள் சென்று பார்வையிட்டனர்.

லொறிசாரதியை சம்மாந்துறைப் பொலிசார் கைதுசெய்துள்ளதுடன் இது குறித்த மேலதிக மேற்கொண்டு வருகின்றனர்.

acc 4

acc 4

acc 4

acc 4

 

அதிகம் வாசித்தவை