முதலமைச்சரின் வேண்டுகோளின் பெயரில் அவுஸ்ரேலியா கிழக்குக்கு நிதி உதவி
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் இற்கும் அவுஸ்ரேலிய அபிவிருத்தித் கூட்டுத்தாபன முதன்மைச் செயலாளர் மைக்கல் நியூமன் குழுவினர்க்கும் இடையிலான சந்திப்பு நேற்று செவ்வாய்க் கிழமை (16) இடம்பெற்றது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுற்றுலா துறை சம்பந்தமாகவும் இளைஞர் யுவதிகள் எதிர் நோக்கும் பிரச்சனை சம்பந்தமாக கலந்துரையாடப்பட்டது.
கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் இதன் மூலமாக இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பினை மேம்படுத்தவும் அதாவது குறைந்த சம்பளத்துடன் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாளர்களாக தொழில் புரியும் இலங்கை இளைஞர் யுவதிகள் சிரமப்படுவதனை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் எனவும் சுற்றுலாத்துறை பயிற்சிகள் மூலம் இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலைவாய்ப்பு வழங்கப்படுவதற்காக அவுஸ்ரேலியா 15 மில்லியன் அவுஸ்ரேலியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந் நிதி மூலம் குறிப்பிட்ட நிதி மூலம் 04 வருட செயற்திட்டமாக சுற்றுலா அபிவிருத்திகள் இடம்பெறவிருப்பதாக அவுஸ்ரேலிய அபிவிருத்தித் கூட்டுத்தாபன முதன்மைச் செயலாளர் மைக்கல் நியூமன் தெரிவித்த கருத்தினை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்..
இக்கலந்துரையாடலின் போது முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ அஸீஸ், முதலமைச்சரின் பிரத்தியேக செயலாளர் சமந்த அபேவிக்கிரம, கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணிப்பாளர் டாக்டர் ஆர்.ஞானசேகரன் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.