சிறார்களின் ஏக்கம் தீர்ந்தது

எமது வீரமுனை கிராமத்தினை பொறுத்தவரை கல்வி, பொருளாதரம் என அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெற்ற போதும் எமது கிராமத்தின் நீண்ட கால பிரச்சினையாக பொது  மைதானம் இன்மை , சிறுவர் பூங்கா மற்றும் நூலக வசதி என்பன காணப்பட்டது.

இவற்றில் மைதான வசதி இன்மையானது கடந்த 2010 ஆம் ஆண்டு தீர்த்து வைக்கப்பட்டது. நூலக வசதி இன்னும் ஏற்படுத்தப்படவில்லை. சிறுவர் பூங்கா வசதியானது தற்போது விநாயகர் விளையாட்டுக் கழக மைதானத்தில் அமைக்கப்பட்டுவரும் சிறுவர் பூங்காவின் மூலமாக இதுவரை காலமும் சிறுவர்களின் மனதில் இருந்த ஏக்கம் தீர்ந்துள்ளது.

சிறுவர்களை பொறுத்தவரையில் சிறுவர் பூங்காவானது  அவர்களின் உளவளர்ச்சியில் முக்கியமானது. இதுவரை காலமும் எமது சிறார்கள் அண்மையில் உள்ள காரைதீவு மற்றும் சம்மாந்துறை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவிலேயே தமது பொழுதினை கழித்து வந்தனர். இது பெற்றோர்களுக்கு  சிரமத்தை மாத்திரம் அல்லாது  கவலையையும் ஏற்படுத்தியது. எனவே தற்போது ஒரு கிராமத்திற்கு ஒரு வேலை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுவரும்  சிறுவர் பூங்காவின்  மூலம் பெற்றோர்களின் கவலையும்  சிறுவர்களின் மத்தியில் இருந்து வந்த ஏக்கம் தீர்ந்துள்ளது.

 IMG 20151204 174552

IMG 20151204 174809

அதிகம் வாசித்தவை