R.K.M பாடசாலை பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்
சது/ வீரமுனை இராம கிருஷ்ண மிஷன் பாடசாலை மாணவர்களின் பழைய மாணவர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டம் 25/11/2015 அன்று காலை 9.00 மணிக்கு பாடசாலை கேட்போர் கூடத்தில் சங்கத்தின் தலைவர் S.மகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
இக் கூட்டத்தில் கடந்த காலங்களில் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயற்பாடுகள் பற்றி விளக்கப்பட்டதோடு பொதுமக்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அவை கேட்டறியப்பட்டதோடு அவர்களின் கருத்துக்களுக்கு அமைய சில தீர்மானங்கள் எட்டப்பட்டன.