வீரமுனை பகவான் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையத்தினால் பகவானின் 90 ஆவது ஜெயந்தி தின விழா
வீரமுனை பகவான் ஸ்ரீ சத்ய சாயி சேவா நிலையத்தினால் பகவானின் 90 ஆவது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு 90 அங்கவீனமுற்ற நபர்களுக்கு போர்வைகளும் (Bet sheet) உலர் உணவுப்பொருட்களும் வழங்கப்பட்டது.
இப் பொருட்கள் நாவிதன்வெளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மத்தியமுகாம் 1,2,3,4,5,6 பிரிவுகளுக்கும் வீரமுனை, வீரச்சோலை போன்ற கிராமங்களுக்கும் வழங்கப்பட்டன. இச்சேவைத்திட்டம் வீரமுனை சாயி சேவா நிலையத்தின் அங்கத்தவர்களால் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.