அம்பாறை மாவட்ட சிறந்த விவசாயிகளைக் கௌரவிக்கும் நிகழ்வு
கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் அம்பாறை மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாவட்டத்தின் சிறந்த விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தெரிவு செய்யப்பட்ட சிறந்த விவசாயிகளுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு
நேற்று (01) அம்பாறையில் மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் கலந்து கொண்டதுடன் ஏனைய அதிதிகளாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இராஜேஸ்வரன், மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் சிவநாதன், மாகாண விவசாயப் பணிப்பாளர் ஹுசைன் விவசாய அமைச்சின் பிரத்தியேகச் செயலாளர் தங்கவேல், ஐ. எல். ஒ அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் கெமுனு ஆகியோருடன் விவசாயத் திணைக்கள் உத்தியோகஸ்தர்கள் விவசாயிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது மாவட்டத்தில் விவசாயச் செய்கைகளின் சிறந்த வெளிப்பாட்டினை ஏற்படுத்திய விவசாயிகளுக்கு சிந்த காளாண் செய்கையாளர், சிறந்த வர்த்தக ரீதியிலான மரக்கறி செய்கையாளர், சிறந்த வர்த்தக ரீதியிலான பழச் செய்கையாளர், சிறந்த விவசாய உற்பத்தியாளர் சங்கம், சிறந்த விவசாயப் புதுமை விரும்பி எனும் ஐந்து பிரிவுகளினூடாக பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அத்துடன் மாவட்ட ரீதியில் தேனீ வளர்ப்பினை ஊக்குவிப்பதற்கு 75 பயனாளிகளுக்கு 300 தேனீ வளர்க்கும் உபகரணங்களும் அதுபோல் ஐ.எல்.ஒ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்திவ் பழச் செய்கை கிராமத்தினை ஊக்குவிப்பதற்காக 5625 கொடித்தோடைக் கன்றுகள், 50000 அன்னாசி, 3125 இனிப்புத் தோடை, 125 கிராம் பப்பாசி விதைகள் போன்ற் வழங்கும் நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், விவசாயக் கிணறுகள் நான்கு அமைப்பதற்கு தலா ஒன்றைரை லெட்சம் ரூபா நிதியும் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
.