வீரமுனைப்பகுதியில் மாட்டு கழிவுகளை கொட்டுவதால் மக்கள் அசௌகரியம்

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனையில் மக்கள் வதியும் பகுதிகளில் மாட்டுக்கழிவுகள் கொட்டப்படுவது தொடர்பில் உரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படவேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று(13) அதிகாலை வீரமுனை சந்தியில் பெருமளவான மாடு வெட்டிய கழிவுகள் கொட்டியதன் காரணமாக அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.

இது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மற்றும் சம்மாந்துறை நகரசபை ஆகியவற்றிற்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்குவந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் கழிவுகளை நகரசபை அகற்றியது.

நூறு வீதம் இந்துக்கள் வசிக்கும் வீரமுனை கிராமத்தின் பல்வேறு பகுதிகளிலும் இவ்வாறு தொடர்ச்சியாக மாடு வெட்டும் கழிவுகள் கொட்டப்பட்டுவருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

வீரமுனையில் வரலாற்றுசிறப்புமிக்க ஆலயமான வீரமுனை ஸ்ரீசிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் நடைபெற்றுவரும் நிலையில் இந்த நாசகார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கடந்த காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் பல்வேறு தடவைகள் முறைப்பாடுகளை செய்துள்ளபோதிலும் இதுவரையில் முறையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லையெனவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மாடுகளை வெட்டுவதற்கு நகரசபையினால் முறையான மாடுவெட்டும் தொழுவங்கள் அமைக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இவ்வாறான செயற்பாடுகள் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

சட்ட விரோதமான முறையில் மாடுகளை வெட்டுவோரே இவ்வாறான செயற்பாடுகளை செய்வதாகவும் இது தொடர்பில் உரிய அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் இவ்வாறான சம்பவங்கள் இனங்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்துபவையாக அமைந்துவிடக்கூடாது எனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

vee 2

vee 2

vee 2

vee 2

vee 2

vee 2

vee 2

vee 2

vee 2

vee 2

vee 2

vee 2

அதிகம் வாசித்தவை