சிறப்பாக இடம்பெற்ற மாட்டுப்பொங்கல் தின நிகழ்வுகள்

தைத் திருநாளின் இரண்டாம் நாளான இன்று, ஆண்டு முழுவதும் தங்களுக்கு உழைத்த மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கிராமங்களில் தமிழர்களால் மாட்டுப்பொங்கல் உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் உழவர்களின் நண்பர்களான மாடுகள்  அலங்கரித்து அவற்றிற்கு பூஜைகள் செய்து தெய்வமாக வணங்கப்படும். மாட்டு தொழுவத்திலேயே பொங்கல் வைத்து, கால்நடைகளுக்கு பொங்கல், பழம் கொடுத்து இன்றைய பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.   

Maaddu 1

பொங்கல் பண்டிகையின் மிக முக்கிய விழாவாக கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவிற்கும், விவசாயத்திற்கு உதவி புரியும் கால்நடைகளுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும் தைப் பொங்கல் தினத்திற்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் விழா பாரம்பரியமாக கொண்டாடப்படுகிறது.

Maaddu 2

விவசாயத்தில் கால்நடை பயன்பாடு குறைந்து, நவீன இயந்திரமயமாக்கல் புகுந்து விட்டது. இதனால், பால் கறவைக்கு மட்டுமே மாடுகள் வளர்க்கும் சூழல் உருவாகியுள்ளது. விவசாய குடும்பத்து இளைஞர்கள், வேலைவாய்ப்புக்காக நகரங்களை நோக்கி சென்றுவிட்டனர். இத்தருணத்தில், கிராமங்களில் மாட்டுப்பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடி, பண்டைய கலாசாரங்களை இளைய தலைமுறையுடன் பகிர்ந்து கொள்ள, கிராமங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன.

Maaddu 3

Maaddu 3

Maaddu 3

Maaddu 3

Maaddu 3

 

அதிகம் வாசித்தவை