சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு சம்மாந்துறை மிலேனியம் சமூர்த்தி வங்கி நடாத்திய மாபெரும் விளையாட்டு விழா
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு சம்மாந்துறை மிலேனியம் சமூர்த்தி வங்கி நடாத்திய மாபெரும் விளையாட்டு விழாவானது வீரமுனை விநாயகர் விளையாட்டு கழக மைதானத்தில் கடந்த 2018.04.28 அன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றது.
இவ் விழாவில் விசேட அதிதிகளாக எம்.எம். ஆஸிக், (உதவி பிரதேச செயலாளர்), எல்.எம். சலீம் (சமூர்த்தி முகாமையாளர் - சம்மாந்துறை), எஸ்.எம். அம்சார் (முகாமைத்துவ பணிப்பாளர் சமூர்த்தி பிரிவு சம்மாந்துறை) பிரதேச சபை உறுப்பினர் என்.கோவிந்தசாமி, ஆலய செயலாளர் எஸ்.சங்கரபிள்ளை மற்றும் கிராம உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இவ் விளையாட்டு விழாவின் நிகழ்வுகளாக பலூன் உடைத்தல், மா ஊதி காசு எடுத்தல், கிடுகு இளைத்தல், முட்டி உடைத்தல், பெண்களுக்கான சங்கீத கதிரை, வினோத உடை போட்டி, மற்றும் கயிறு இழுத்தல் என்பன இடம்பெற்றன.