சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா - 2017
வீரமுனை விநாயகர் விளையாட்டுக்கழகம் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நடாத்திய மாபெரும் விளையாட்டு விழா 15.04.2017 அன்று பி.ப 2.30 மணியளவில் வீரமுனை விநாயகர் விளையாட்டுக் கழக மைதானத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் தமிழர் கலாசாரத்தையும் பாரம்பரியத்தினையும் பிரதிபலிக்கதக்கவையில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றன. இவ்விளையாட்டு நிகழ்வின் முதலாவது அங்கமாக மரதன் ஓட்டம் காலை 6.30 மணியளவில் வீரமுனை விநாயகர் விளையாட்டுக் கழக மைதான நுழைவாயிலிருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டு மல்வத்தை வரை சென்று மீண்டும் மைதான நுழைவாயிலை வந்தடைந்தது.
அதனைத் தொடர்ந்து பி.ப 2.30 மணியளவில் வீரமுனை விநாயகர் விளையாட்டுக் கழக மைதானத்தில் அதிதிகளை வரவேற்றல், கொடியேற்றல், மங்கள விளக்கேற்றல் மற்றும் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.
இந்நிகழ்வில் ஆன்மீக அதிதியாக திரு சிவஸ்ரீ K.நிமலேஸ்வரக் குருக்கள், விசேட அதிதிகளாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ K.கோடீஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கௌரவ M.இராஜேஸ்வரன், கௌரவ T.கலையரசன் மற்றும் கௌரவ அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஜனாப் M.M.ஆஸிக், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி H.M.உபுல் பியலால் வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய தலைவர் திரு.G.ராஜகோபாலபிள்ளை, பொறியியலார் கலாநிதி S.கணேஸ், சது/ இ.கி.மி வித்தியாலய அதிபர் திரு. S.கோணேசமூர்த்தி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.